/
செய்திகள்
/
வர்த்தகம்
/
ஜி.எஸ்.டி., சந்தேகங்கள்
/
ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை? (23)
/
ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை? (23)
UPDATED : நவ 04, 2024 09:04 AM
ADDED : அக் 28, 2024 02:57 AM

குற்றச்சாட்டுகள் மற்றும் தீர்வுக்கான யோசனைகள் குறித்து வணிகர்கள் உள்ளிட்ட வரி செலுத்துவோர் எவரும் எழுதலாம் என்ற, 'தினமலர்' அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு; நுாற்றுக்கணக்கான கடிதங்களை எழுதி குவித்துவிட்டனர். அதன்விவரம், 'தினமலர்' இதழில் இப்பகுதியில் வெளியாகும்.
வி.எஸ்.எப்.,-பி.எஸ்.எப்.,வரி குறைக்கப்பட வேண்டும்
எம்.எம்.எப்., -வி.எஸ். எப்., பஞ்சு கொள்முதலுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி.,வரி விதிக்கப்பட்டு உள்ளது. இதில் உற்பத்தி செய்யும் நூலுக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி., அந்த நூலில் துணி உற்பத்தி செய்து விற்பனை செய்யும் போது 5 சதவவீதம் ஜி.எஸ்.டி. ,விதிக்கப்படுகிறது.
விசைத்தறி நெசவாளர்கள், 12 சதவீதத்திற்கு நூலைக்கொள்முதல் செய்து 5 சதவீதத்திற்கு துணியாக விற்பனை செய்யும் போது மீதமுள்ள 7 சதவீதத்தை ' ரீபண்ட்' பெற்று வருகிறோம்.
இதில் மத்திய ஜி.எஸ்.டி., கட்டுப்பாட்டில் இருக்கும் நெசவாளர்களுக்கு ' ரீபண்ட்' கிடைக்க 60 முதல் 90 நாட்கள் வரை தாமதம் ஆகிறது. இதனால் நடப்பு மூலதனம் (வொர்க்கிங்கேபிடல் முடங்கி விடுகிறது.
அதேபோல மாநில அரசின் வணிகவரித்துறை கட்டுப்பாட்டில் உள்ள விசைத்தறி நெசவாளர்களுக்கு7 சதவீத ஜி.எஸ்.டி., ' ரீபண்ட்' கடந்த ஆண்டு நவ.,ல் இருந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிறது. கடந்த மார்ச் மாதத்துக்குப்ப பின் இதுவரை யாருக்கும் ' ரீபண்ட்' வரவில்லை,
அதே போல ஜி.எஸ்.டி., ' ரீபண்ட்' பெற விசைத்தறி நெசவாளர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும், 2.5 சதவீதம் செலவாகிறது.
மத்திய அரசு வி.எஸ்.,எப்.பி.எஸ்.எப்., மூலப்பொருட்களுக்கு 18 சதவீத வரியை 12 சதவவீதமாக குறைக்க வேண்டும். இந்த ஜவுளி ரகங்களுக்கும் ஒரே விகிதத்தி்ல் வரி விதித்ததால், ஐ.டி.சி., நிலுவை இல்லாமல் அதிக மூலதனம் உற்பத்தியாளர்கள் வசம் இருக்கும்; வர்த்தகம் மேம்படும்.
வாடிக்கையாளர்கள் நிறுவனங்கள் , கடனாக கொள்முதல் செய்யும் போது அதற்கான ஜி.எஸ்.டி., பணத்தை விற்பனை செய்தவரே செலுத்துகிறார். இவ்வாறு செலுத்திய ஜி.எஸ்.டி., தொகையை ' ஆட்டோ கிரெடிட்' வாயிலாக வாடிக்கையாளர் பயன்படுத்தி கொள்கிறார். குறு, சிறு, மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய தொகையை கொடுக்காமல் தாமதம் செய்பவர்களுக்கு கிரெடிட் எடுக்க முடியாதவாறு ஜி.எஸ்.டி., தளத்தில் மாறுதல் செய்யப்பட வேண்டும்.
எம்.ஜெயபால், பொதுச்செயலாளர், அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு.
முகவரி:
ஜி.எஸ்.டி., - தீர்வைத் தேடி!
தினமலர், டி.வி.ஆர்., ஹவுஸ், சுந்தராபுரம், கோவை - 641 024.