sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/ ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் மறைவிடம் தாக்கி அழிப்பு; ஒருவன் கைது

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் மறைவிடம் தாக்கி அழிப்பு; ஒருவன் கைது

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் மறைவிடம் தாக்கி அழிப்பு; ஒருவன் கைது


ADDED : நவ 29, 2025 06:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 06:45 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளின் மறைவிடத்தை ராணுவத்தினர் கண்டுபிடித்து அழித்தனர். அங்கிருந்து கையெறி குண்டுகள் உள்பட வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர்.

பயங்கரவாதிகள் நடமாட்டம் குறித்து கிடைத்த தகவலின் பேரில், அவந்திபோரா போலீசார், 42 ராஷ்டிரிய ரைபிள்ஸ் மற்றும் 180 பட்டாலியன் சிஆர்பிஎப் படையினர் இணைந்து, நானேர் மிதூராவில் கூட்டு தேடுதல் வேட்டை நடத்தினர்.

இந்த சோதனையின் போது, பயங்கரவாதிகளுக்கு உதவி வந்த நஷிர் அகமது கனாய் என்பவனை கைது செய்தனர். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருப்பது தெரிய வந்தது. மேலும், பயங்கரவாதிகளின் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை பதுக்கி வைக்க, தனக்கு சொந்தமான பழத்தோட்டத்தில் ரகசிய இடத்தை கொடுத்துள்ளான். இதையடுத்து, அந்த இடத்திற்கு நேரில் சென்ற பாதுகாப்பு படையினர், அங்கிருந்து இரு கையெறி குண்டுகள், பயங்கர வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, மாஜிஸ்திரேட் முன்னிலையில் அந்த இடத்தை தாக்கி அழித்தனர்.

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பினருக்கு பொருள் உதவியும், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை கடத்துவதற்கும் நஷிர் அகமது கனாய் உதவியது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us