தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது : மத்திய ., அமைச்சர்

தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது : மத்திய ., அமைச்சர்

தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது : மத்திய ., அமைச்சர்


UPDATED : ஆக 29, 2016 07:40 AM

ADDED : ஆக 27, 2016 11:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 29, 2016 07:40 AM ADDED : ஆக 27, 2016 11:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க முடியாது,'' என, அனைத்து கட்சி கூட்டத்திற்கு பின், கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

@Image@காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின் தீர்ப்பின்படி, தமிழகத்திற்கு, 50 டி.எம்.சி., தண்ணீர் வழங்க, கர்நாடகாவுக்கு உத்தரவிடும்படி, தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்நிலையில், காங்., மூத்த தலைவரும், கர்நாடக முதல்வருமான சித்தராமையா தலை மையில், பெங்களூருவில், அனைத்து கட்சி கூட்டம் நேற்று நடந்தது.

மத்திய பா.ஜ., அமைச்சர் அனந்த குமார், கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல், ம.ஜ.த., மாநில தலைவர் குமாரசாமி, பா.ஜ., மூத்த தலைவர் ஈஸ்வரப்பா, அனைத்து எம்.பி.,க்கள், காவிரி நிதி பகுதியின் எம்.எல்.ஏ.,க் கள் உட்பட, பலர் இதில் பங்கேற்றனர்.கூட்டம் @nextcolumn@ முடிந்ததும், முதல்வர் சித்தராமையா கூறிய தாவது: கர்நாடகாவிலி ருந்து, 50டி.எம்.சி., தண்ணீர் திறந்துவிடக் கோரி, உச்ச நீதிமன்றத் தில், தமிழக அரசு வழக்கு தொடர்ந்து உள்ளது.

அனைத்து கட்சி தலைவர் கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசனை கூட்டத்தை கூட்டி, இதுகுறித்து விரிவாக விவாதித்தோம். 'தற்போதைய சூழ்நிலையில், தண்ணீர் தர வாய்ப்பில்லை' என, தமிழக விவசாயிகளுக்கு ஏற்கனவே தெரிவித்து உள்ளேன்.

மாநிலத்தில், போதிய மழை இல்லை; பல இடங் களில் கடும் வறட்சி நிலவுகிறது. தற்போதைய நிலவரப்படி, காவிரி நதியின் நான்கு அணைகளில் மொத்தம், 51 டி.எம்.சி., தண்ணீர் உள்ளது.

இதில் மைசூரு, மாண்டியா, பெங்களூரு ஆகிய நகரங்களின் குடிநீருக்கு, 40 டி.எம்.சி., தண்ணீர் தேவைப்படுகிறது. தற்போது பயிரிடப்பட்டுள்ள கரும்பு, நெல் விவசாயத்திற்கு கூட தண்ணீர் இல்லை.

ஆனால், 50 டி.எம்.சி., தண்ணீர் வழங்க கோரி, தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. 'தமிழகத் திற்கு தண்ணீர் வழங்க முடியாது' என, கர்நாடக மாநில அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்க, அனைத்து கட்சி கூட்டத்தில் ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டு உள்ளது.@nextcolumn@தமிழகத்திற்கு இதுவரை, 29 டி.எம்.சி., தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

'குடிப்பதற்கே தண்ணீர் இல்லை' :

காவிரி நீரை நம்பியுள்ள கர்நாடக விவசாயிகள், தண்ணீர் இல்லாமல் சிரமப்படுகின்றனர். பெங்களூருவிலேயே குடிப்பதற்கு தண்ணீர் இல்லை; மழைஇன்றி அணைகள் வறண்டுள் ளன; தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாத நிலை உருவாகி உள்ளது. தமிழகத் திற்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என, சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கும்படி, மாநில அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்.

அனந்த குமார், மத்திய அமைச்சர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us