காவிரி வழக்கு இன்று விசாரணை நீர் திறப்பை அதிகரித்தது கர்நாடகா
காவிரி வழக்கு இன்று விசாரணை நீர் திறப்பை அதிகரித்தது கர்நாடகா
UPDATED : செப் 05, 2016 12:58 AM
ADDED : செப் 04, 2016 10:49 PM

சுப்ரீம் கோர்ட்டில், காவிரி நீர் தொடர்பான வழக்கின் விரிவான
விசாரணை இன்று நடக்க உள்ளதால், நீர் திறப்பை, கர்நாடகா திடீரென
அதிகரித்துள்ளது.
@Image@
தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 192 டி.எம்.சி., காவிரி நீரை,
கர்நாடகா வழங்க வேண்டும். இதன்படி, ஜூன் முதல் ஆகஸ்ட், 19 வரை, 74.6
டி.எம்.சி., நீரை வழங்கி இருக்க வேண்டும்; 24.5 டி.எம்.சி., நீரை மட்டுமே,
கர்நாடகா திறந்துள்ளது.
கடந்த ஆண்டு வழங்க வேண்டிய நீரிலும், 35 டி.எம்.சி., நிலுவை
வைத்துள்ளது. இதனால், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதித்துள்ளது.
விரைவில் துவங்க வேண்டிய சம்பா சாகுபடியும், பாதிக்கும் சூழல் உருவாகி
உள்ளது.
அதனால், 'தமிழகத்திற்கு தர வேண்டிய, 50
@nextcolumn@டி.எம்.சி.,
தண்ணீரில், 25 டி.எம்.சி.,யை., 10 நாட்களிலும், மீதமுள்ள, 25
டி.எம்.சி.,யை, செப்., மாத இறுதிக்குள்ளும் வழங்க உத்தரவிட வேண் டும்' எனக்
கோரி, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு,
இம்மாதம், 2ம் தேதி,நீதிபதிகள் தீபக் மிஸ்ரா,லலித் ஆகியோர் முன்
விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு கர்நாடகா
கட்டுப்பட வேண்டும். நல்லிணக்க அடிப்படையில், தமிழகத்துக்கு உரிய தண்ணீரை
வழங்க வேண்டும். கர்நாடகாவால் எவ்வளவு தண்ணீர் திறந்துவிட முடியும் என்பது
குறித்த பட்டியலை, தாக்கல் செய்ய வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஆனால், 'அணைகளில் குறைவான நீர் இருப்ப தால், கூடுதல் நீர் தர
இயலாது' என, கர்நாடகா தெரிவித்தது. இவ்வழக்கு தொடர்பான விரிவான விசாரணை,
இன்று மீண்டும் நடக்கிறது.
இந் நிலையில், காவிரியில் கூடுதல் நீரை கர்நா டகா
திறந்து விட்டுள்ளது.
ஹேரங்கி அணையில் இருந்து வினாடிக்கு, 2,500 கன அடி; ஹேமாவதி
அணையில்இருந்து, 4,880 கன அடி; கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து, 1,835 கன
அடி; கபினி அணையில் இருந்து வினாடிக்கு, 2,050 கன அடி நீர் என, மொத்தமாக,
வினாடிக்கு, 11 ஆயிரத்து, 265 கன அடி நீரை கர்நாடகா, திடீரென திறந்துள்ளது.
இதுகுறித்து, தமிழக பொதுப்பணித் துறை
@nextcolumn@அதிகாரிகள் கூறுகையில்,
'காவிரி வழக்கு விசாரணைக்கு வரும் நாட்களில், நீர் திறப்பை அதிகரிப்பதை
கர்நாடக அரசு வழக்கமாகக் கொண்டுள்ளது. அதேபோல் தான், நேற்றும் தண்ணீர்
அதிகம் திறந்து விடப்பட்டுள்ளது. தமிழகத்தின் கோரிக்கையை கர்நாடகா ஏற்றது
என, கூற முடியாது' என்றனர்.
மேட்டூர் அணையில் தற்போது, 37.4 டி.எம்.சி., நீர் இருப்பு
உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு, 6,065 கன அடியாகவும், வெளியேற்றப்படும்
அளவு, 1,250 கன அடியாகவும் உள்ளது. அதேநேரம், சம்பா பருவ பாசனத்திற்கு
நீர் திறப்பதற்கு, மேட்டூர் அணையில், 70 டி.எம்.சி., இருக்க வேண்டும்.
- நமது நிருபர் -
