தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/குளச்சல் துறைமுக திட்டம் கைவிடப்படாது என பிரதமர்...திட்டவட்டம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை நிராகரிப்பு

குளச்சல் துறைமுக திட்டம் கைவிடப்படாது என பிரதமர்...திட்டவட்டம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை நிராகரிப்பு

குளச்சல் துறைமுக திட்டம் கைவிடப்படாது என பிரதமர்...திட்டவட்டம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை நிராகரிப்பு


UPDATED : ஜூலை 30, 2016 12:18 AM

ADDED : ஜூலை 29, 2016 11:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 30, 2016 12:18 AM ADDED : ஜூலை 29, 2016 11:08 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழகத்தில், கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகேயுள்ள இணயத்தில், துறைமுகம் அமைவதற்கு கேரளா தெரிவித்த எதிர்ப்பை நிராகரித்த பிரதமர் நரேந்திர மோடி, ''அந்த திட்டம், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது; அதை கைவிட முடியாது,'' என, திட்டவட்டமாக கூறியுள்ளார்.

@Image@கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே உள்ள சிறிய மீன்பிடி துறைமுகத்தை, பெரியளவில் கட்டமைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதி

களும், இதை வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து, குளச்சல் அருகேயுள்ள இணயம் பகுதியில் துறைமுகம் அமைக்க, மத்திய அமைச்சரவை, சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. மூன்று கட்டங்களாக இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், இந்த துறைமுகம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்திற்கு, அண்டை மாநிலமான கேரளா, கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இணயத்துக்கு மிக அருகில் உள்ள, கேரளாவின்

@nextcolumn@ விழிஞ்ஞம் என்ற இடத்தில், பெரியளவிலான துறைமுகம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

'இணயத்தில் துறைமுகம் வந்தால், விழிஞ்ஞம் துறைமுகத்தின் வர்த்தக வளர்ச்சி பாதிக்கும். அருகருகே, இரு துறைமுகங்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை' என, கேரள மாநில அரசியல் கட்சிகள் அனைத்துமே, ஓரணியில் திரண்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில்,மார்க்சிஸ்ட் மூத்த தலைவரும், கேரள முதல்வருமான பினராயி விஜயன், நேற்று டில்லி வந்திருந்தார். பிரதமர் மோடியை, பார்லி., அலுவலகத்தில் உள்ள அவரது இல்லத்தில், காலை, 11:௦௦ மணிக்கு சந்தித்துப் பேசினார். அப்போது, இணயம் துறைமுக திட்டத்தை கைவிடக் கோரி, அதற்கான மனுவையும் அளித்தார்.

அரை மணி நேரம் நடந்த இந்தச் சந்திப்பின் போது, கேரள முதல்வருடன், அம்மாநில துறைமுக துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் கேரள மாநிலத்தின் அனைத்து கட்சி எம்.பி.,க்களும் உடனிருந்தனர்.

கோரிக்கை மனுவை வாங்கியதும், சில நிமிடங்கள், சம்பிரதாய பேச்சுக்கள் இருந்தன. பின் வந்திருந்தவர்களிடம், பிரதமர் மோடி கூறியதாவது:

நாட்டின் முன்னேற்றத்திற்கு துறைமுகங்களின் வளர்ச்சியும், பங்களிப்பும் மிக அவசியம். அந்த அடிப்படையில் தான், இணயம் துறைமுகத் திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. கேரளாவின்

@nextcolumn@விழிஞ்ஞம் துறைமுகம் அருகே அமைகிறது என்பதற்காக, அதை திரும்ப பெற வேண்டிய அவசியம் இல்லை.

தமிழகத்தின் குளச்சல் பகுதி அருகே, சர்வதேச துறைமுகம் அமைய வேண்டுமென்ற கோரிக்கை, பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

சர்வதேச கடல் எல்லைக்கு அருகே, இயற்கை துறைமுகமாக விளங்கும் அங்கு, பெரியளவில் துறைமுகம் அமைப்பது, நாட்டிற்கு மிகுந்த நன்மை தரும்.பெரியளவில் சரக்குகளை கையாள வேண்டியிருப்பதால், இரு துறை முகங்கள் அவசியமே. இரண்டும் அருகருகே இருப்பதில், தவறு என்ன இருந்து விடப் போகிறது? கேரளாவின் விழிஞ்ஞமும் இருக்கட்டும்; தமிழகத்தின் இணயமும் இருக்கட்டுமே.

அப்போது தான், இரு துறைமுகங்களுக்கும் இடையில் போட்டி இருக்கும்; அதிகமான வருவாயும் கிடைக்கும். எனவே, இணயத்தை தடுப்பதைக் காட்டிலும், விழிஞ்ஞத்தை எவ்வாறு மேம்படுத்த முடியும் என, யோசியுங்கள்.இவ்வாறு அவர்களிடம் பிரதமர் கூறினார்.

இதையடுத்து, 'விழிஞ்ஞத்தில் துறைமுகப் பணிகள் துவங்கப்பட்டு நடந்து வருகின்றன. அவை முடிந்து, அங்கு துறைமுகம் செயல்பட துவங்கும் வரையில், இணயத்தின் துறைமுகப் பணிகளை நிறுத்தியாவது வைக்காலாமே' என, கேரள முதல்வர் தரப்பில் கேட்கப்பட்டதாகவும், பிரதமர், அதை ஏற்க மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. - நமது டில்லி நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us