'செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால் பொருளாதார பாதிப்பில்லை': மோடி
'செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால் பொருளாதார பாதிப்பில்லை': மோடி
UPDATED : மார் 09, 2017 03:51 AM
ADDED : மார் 07, 2017 10:57 PM

ஆமதாபாத்:''செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பாதிப்படையவில்லை. பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
@Image@பிரதமர் நரேந்திர மோடி, தன் சொந்த மாநில மான குஜராத்தில், நேற்று பல்வேறு நிகழ்ச்சி களில் பங்கேற்றார்;
தாகேஜ் என்ற இடத்தில், வர்த்தக துறை நிகழ்ச்சியில் பங்கேற்று, அவர் பேசியதாவது:
@nextcolumn@ பழைய, 500 - 1,000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பை, எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித் தன; பொருளாதாரம் பெரிய பின்னடைவை சந்திக் கும் என்றன.
ஆனால், செல்லாத ரூபாய்நோட்டு அறிவிப்பால் பொருளாதாரம் பாதிப்படையவில்லை; வளர்ச்சியை நோக்கி நடை போடுகிறது.
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு, பொது மக்கள், தொழில் துறையினர் மட்டுமின்றி, பல அரசியல் கட்சிகளும் வரவேற்பு தெரிவித்தன; உறுதி யான நடவடிக்கை என, உலக நாடுகள் பாராட்டின.
எதிர்க்கட்சிகள், அரசியலுக்காக இதை விமர்சிக் கின்றன. 2014ல், மத்தியில்,பா.ஜ., ஆட்சி பொறுப் பேற்கும் முன், நாட்டின் பணவீக்கம் மிக மோசமான நிலையில் இருந்தது. தற்போது அது சீரடைந்து வருகிறது, என்றார்.
வளர்ச்சி திட்டங்கள்: பரூச் நகரில் பிரதமர்
@nextcolumn@பேசியதாவது: நாட்டின்சாலை மேம்பாட்டு திட்டங்களில், மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.
முந்தைய காங்கிரஸ் தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சியில், நாள் ஒன்றுக்கு, 2 கி.மீ., தொலை வுக்கு மட்டுமே புதிய தேசிய நெடுஞ் சாலைகள் அமைக்கப்பட்டன; தற்போது இது, 22 கி.மீ.,யாக அதிகரிக்கப்பட்டுள்ளது, என்றார்.
