தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ரகசியங்களை அம்பலப்படுத்துவேன்! டில்லி 'மாஜி' அமைச்சர் அதிரடி

ரகசியங்களை அம்பலப்படுத்துவேன்! டில்லி 'மாஜி' அமைச்சர் அதிரடி

ரகசியங்களை அம்பலப்படுத்துவேன்! டில்லி 'மாஜி' அமைச்சர் அதிரடி


ADDED : மே 14, 2017 01:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 14, 2017 01:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:''என் அடுத்த அஸ்திரம், ஆம் ஆத்மி கட்சிக்கு ஓட்டு போட்ட டில்லி மாநில மக்களுக்கு, கடும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கும்,'' என, சமீபத்தில் பதவி பறிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ரா கூறியுள்ளார்.

டில்லியில், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். டில்லி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த, ஆம் ஆத்மியை சேர்ந்த கபில் மிஸ்ரா, கட்சியின் மூத்த தலைவர்கள் பற்றி புகார் கூறி வந்ததால், அமைச்சரவையில் இருந்தும், கட்சியில் இருந்தும், சமீபத்தில் நீக்கப்பட்டார்.

'ஆம் ஆத்மி கட்சியின் ஐந்து மூத்த தலைவர்களின் வெளிநாட்டு பயணம் குறித்த விபரங்களை வெளியிட வேண்டும்' என, கபில் மிஸ்ரா வலியுறுத்தி வருகிறார். முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் லஞ்சம் பெற்றதாக குற்றஞ் சாட்டியுள்ள மிஸ்ரா, காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

நேற்று முன்தினம், மஹாத்மா காந்தி நினைவிடத்தில், உண்ணாவிரதம் இருந்தபோது மயங்கி விழுந்த மிஸ்ராவை, 'மருத்துவமனையில் சேர்த்து, தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும்' என, டாக்டர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், கபில் மிஸ்ரா கூறியதாவது:

நான் தனிமையாக இருப்பதாக உணர்கிறேன். அதனால், காந்தி நினைவிடத்துக்கு சென்றேன். அடுத்ததாக, அனுமன் கோவிலுக்கு செல்ல உள்ளேன். ஞாயிற்றுக்கிழமை, ஆம் ஆத்மி தலைவர்கள் பற்றி, பல்வேறு ரகசியங்களை அம்பலப்படுத்த திட்டமிட்டுள்ளேன். அந்த ரகசியங்கள், ஆம் ஆத்மிக்கு ஓட்டு போட்ட மக்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும். ஆம் ஆத்மியை நம்பியவர்களை உலுக்கும் வகையில் அந்த தகவல்கள் இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us