ஆள் இல்லாத வீட்டில் பதுக்கி வைத்தஏழரை டன் வெடிபொருள் சிக்கியது
ஆள் இல்லாத வீட்டில் பதுக்கி வைத்தஏழரை டன் வெடிபொருள் சிக்கியது
ADDED : செப் 17, 2011 09:34 PM
திருச்சூர்:ஆள் இல்லாத வீட்டில், 183 சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 7.5 டன் எடை கொண்ட அதிக சக்தி வாய்ந்த, தடை செய்யப்பட்ட வெடிபொருட்களை போலீசார் கைப்பற்றினர்.
இதுதொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.கேரளா திருச்சூர் மாவட்டம், எருமப்பெட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில், தடை செய்யப்பட்ட வெடிபொருட்கள் அதிகளவில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருச்சூர் மாவட்ட ரூரல் போலீஸ் எஸ்.பி., தேபேஸ்குமார் பெக்ரா உத்தரவின்படி, போலீசார் அங்கு சென்று விசாரித்தனர்.
அப்போது முருக்கன்சேரி ஜெய்சன் என்பவரது கட்டுப்பாட்டில் உள்ள, ஆள் இல்லாத வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அதிக சக்தி வாய்ந்த அமோனியம் நைட்ரேட் பதுக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை வெடிகுண்டுகள் தயாரிக்கவும், கல் குவாரிகளில் பாறாங்கற்களை பிளக்கவும் பயன்படுத்தலாம். மொத்தம் 183 சாக்குமூட்டைகளில் வெடிபொருட்கள் இருந்தன. அவற்றின் எடை 7.5 டன். இது தொடர்பாக, ஜெய்சனை போலீசார் கைது செய்தனர்.