அரசு நிலத்தை அபகரித்ததாக உ.பி., மாஜி அமைச்சர் மீது புகார்
அரசு நிலத்தை அபகரித்ததாக உ.பி., மாஜி அமைச்சர் மீது புகார்
ADDED : அக் 12, 2011 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லக்னோ : உத்தரப்பிரதேச முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அரசு நிலத்தை அபகரித்ததாக, லோக் ஆயுக்தா நீதிபதி, முதல்வர் மாயாவதிக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.
உ.பி., தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் பாட்ஷா சிங். இவர், கிராம சபை நிலத்தை அபகரித்துக் கொண்டதாக, அகிலேஷ் குமார் என்பவர் புகார் செய்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, இவரை முதல்வர் மாயாவதி, அமைச்சரவையிலிருந்து நீக்கினார். பாட்ஷா சிங்கின் கல்விச் சான்றிதழில் ராமேந்திரசிங் என்ற பெயர் உள்ளதாகவும், அவர் பாட்ஷா சிங் என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட்டதாகவும், கிராம சபை நிலத்தை அபகரித்த பாட்ஷா சிங், உரிய முறையில் வருமான வரி கட்டவில்லை எனவும், லோக் ஆயுக்தா நீதிபதி என்.கே.மெஹ்ரோத்ரா, முதல்வருக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

