sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/ மஹா கும்பமேளாவில் புனித நீராடிய பூட்டான் மன்னர்

மஹா கும்பமேளாவில் புனித நீராடிய பூட்டான் மன்னர்

மஹா கும்பமேளாவில் புனித நீராடிய பூட்டான் மன்னர்


UPDATED : பிப் 04, 2025 06:29 PM

ADDED : பிப் 04, 2025 06:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 04, 2025 06:29 PM ADDED : பிப் 04, 2025 06:26 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிரக்யாராஜ்: உத்தர பிரதேசத்தில் நடக்கும் மஹா கும்பமேளாவில் பூட்டான் மன்னர் ஜிக்மி கெய்சர் நெம்கியால் வாங்சுங் புனித நீராடினார்.

உ.பி.,யின் பிரயாக்ராஜில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மஹா கும்பமேளா நிகழ்வு ஜன., 13ல் துவங்கியது வரும் 26 வரை இந்த நிகழ்வு நடைபெறுகிறது. இந்நிகழ்வில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த துாதர்கள் உட்பட, மற்றும் வெளிநாட்டு சிறப்பு பிரதிநிதிகள் புனித நீராடினர்.

இந்நிலையில் பூட்டான் மன்னர் ஜிக்மி கெய்சர் நெம்கியால் உத்தரபிரதேச மாநிலம் ல்னோ வந்தார். அவரை முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார். இன்று மஹா கும்ப மேளாவில் பங்கேற்று புனித நீராடினார். அப்போது காவி உடை அணிந்து பயபக்தியுடன் சூரியனை வழிபட்டு 'அர்க்யா' எனப்படும் சடங்குகளை செய்தார். . பூட்டான் மன்னருடன் முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் புனித நீராடினார். முன்னதாக மஹா கும்பமேளாவில் இதுவரை 37 கோடி பேர் புனித நீராடியதாக உ.பி .அரசு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us