UPDATED : செப் 17, 2011 07:59 PM
ADDED : செப் 17, 2011 07:44 PM
ஆக்ரா : ஆக்ராவில், தனியார் மருத்துவமனையில் நேற்று நிகழ்ந்த குண்டு வெடிப்பில், ஆறு பேர் காயம் அடைந்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ளது ஜெய் மருத்துவமனை. இங்குள்ள வரவேற்பு அறை பகுதியில், சேர்களுக்கு கீழே வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு, இரவு வெடித்தது. இச்சம்பவத்தில் ஆறு பேர் காயம் அடைந்தனர். 'இந்த குண்டு வெடிப்பு, பயங்கரவாத சம்பவமா அல்லது சாதாரண வெடிகுண்டு சம்பவமா என்பது பற்றி, இப்போதைக்கு எதையும் தெரிவிக்க இயலாது' என, ஆக்ரா போலீஸ் ஐ.ஜி., பி.கே.திவாரி தெரிவித்துள்ளார். ஆரம்ப கட்ட விசாரணையில், வெடித்தது நாட்டு வெடிகுண்டு என, தெரியவந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். பயங்கரவாத தடுப்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதாக மற்றொரு உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.