ADDED : ஜன 19, 2025 01:56 AM
உளுந்து அறுவடை பணி: தொழிலாளர்கள் தீவிரம்
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் ஒன்றிய பகுதிகளில், மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து செடிகளை, அறுவடை செய்யும் பணிகளில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட லட்சுமணம்பட்டி, பஞ்சப்பட்டி, வீரியபாளையம், கண்ண முத்தாம்பட்டி, சேங்கல், கணக்கம்பட்டி, சுக்காம்பட்டி, பாப்பகாப்பட்டி, மலையாண்டிப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள மானாவாரி நிலங்களில், விவசாயிகள் உளுந்து சாகுபடி செய்துள்ளனர். உளுந்துக்கு தேவையான மழை பெய்துள்ளது.
மழையால் செடிகள் பசுமையாக வளர்ந்து, பூக்கள் பூத்து காய்கள் பிடித்துள்ளன. உளுந்து தற்போது முதிர்ந்து விளைச்சல் கண்டுள்ளது. மேலும் விளைந்த உளுந்து செடிகளை, விவசாய தொழிலாளர்கள் கொண்டு அறுவடை பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த முறை உளுந்து சாகுபடியில் ஓரளவு மகசூல் உள்ளது. இதன் மூலம், விவசாயிகளுக்கு வருமானம் பாதிப்பு இன்றி கிடைக்க வாய்ப்பு
உள்ளது.