தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/அசாம் சட்டசபை விவாதத்தை ஒளிபரப்பிய எம்.எல்.ஏ., 'சஸ்பெண்ட்'

அசாம் சட்டசபை விவாதத்தை ஒளிபரப்பிய எம்.எல்.ஏ., 'சஸ்பெண்ட்'

அசாம் சட்டசபை விவாதத்தை ஒளிபரப்பிய எம்.எல்.ஏ., 'சஸ்பெண்ட்'


UPDATED : பிப் 07, 2017 04:30 AM

ADDED : பிப் 07, 2017 04:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 07, 2017 04:30 AM ADDED : பிப் 07, 2017 04:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கவுகாத்தி : சட்டசபையில் நடந்த விவாதத்தை, 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில், நேரடியாக ஒளிபரப்பிய, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த, ஏ.ஐ.யு.டி.எப்., கட்சியைச் சேர்ந்த, எம்.எல்.ஏ.,வான, அமினுல் இஸ்லாம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

நேரடி ஒளிபரப்பு:


அசாமில், முதல்வர் சர்பானந்தா சோனவால் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. சட்டசபை கூட்டத்தில், தான் பங்கேற்ற விவாதத்தை, ஏ.ஐ.டி.யு.எப்., - எனப்படும் அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்.எல்.ஏ.,வான அமினுல் இஸ்லாம், பேஸ்புக் சமூக வலைதளத்தில் நேரடியாக ஒளிபரப்பினார்.

சஸ்பெண்ட்:


இது குறித்து புகாரின் அடிப்படையில், அவரை, மூன்று நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்ய, ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை அளித்துள்ளது. அந்தப் பரிந்துரையை ஏற்று, எம்.எல்.ஏ., அமினுல் இஸ்லாமை, மூன்று நாட்களுக்கு, 'சஸ்பெண்ட்' செய்வதாக, சபாநாயகர் அறிவித்தார்.

தவறு தான்:


''நான் செய்தது தவறு தான். அதே நேரத்தில், சட்டசபையில் நடக்கும் விவாதம் குறித்து, நமக்கு ஓட்டளித்த மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையிலேயே, நேரடியாக ஒளிபரப்பு செய்தேன்,'' என்றார், அமினுல் இஸ்லாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us