தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/'ஊழலுக்கு எதிரான போர் தொடரும்': பிரதமர் மோடி

'ஊழலுக்கு எதிரான போர் தொடரும்': பிரதமர் மோடி

'ஊழலுக்கு எதிரான போர் தொடரும்': பிரதமர் மோடி


UPDATED : பிப் 26, 2017 06:29 AM

ADDED : பிப் 24, 2017 10:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 26, 2017 06:29 AM ADDED : பிப் 24, 2017 10:03 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லக்னோ:''ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிரான மத்திய அரசின் போராட்டம் தொடரும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

@Image@

ஒடிசா மற்றும் மஹாராஷ்டிர மாநிலங்களில், சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ., அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், உ.பி., சட்டசபை தேர்தலையொட்டி, இங்குள்ள கோண்டா பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு, @nextcolumn@பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.,வுக்கு ஆதரவு திரட்டினார்.

மக்கள் ஆதரவு


அப்போது அவர் பேசியதாவது:

குஜராத், ஒடிசா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களில், பா.ஜ., அபார வெற்றி பெற்றுள்ளது. ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிராக, மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். ஊழலையும், கறுப்பு பணத்தையும் வேரோடு சாய்க்க, மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.

மஹா சிவராத்திரி தினத்தில், மூன்றாவது கண்ணான அக கண்ணை, மக்கள் பயன்படுத்த வேண்டும்; பல ஆண்டுகளாக, நாட்டை சுரண்டியவர்களை மக்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.

@nextcolumn@

புறக்கணிக்க வேண்டும்


மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களை செயல்படுத்தும், பா.ஜ.,விற்கு ஆதரவளிக்க வேண்டும். பா.ஜ., பெரும் வெற்றி பெற மக்கள் ஓட்டளிக்க வேண்டும்; சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளை புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us