தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/பார்லிமென்டிற்கு 'மட்டம்' போடாதீங்க!:பா.ஜ., - எம்.பி.,க்களுக்கு மோடி அறிவுரை

பார்லிமென்டிற்கு 'மட்டம்' போடாதீங்க!:பா.ஜ., - எம்.பி.,க்களுக்கு மோடி அறிவுரை

பார்லிமென்டிற்கு 'மட்டம்' போடாதீங்க!:பா.ஜ., - எம்.பி.,க்களுக்கு மோடி அறிவுரை


UPDATED : மார் 23, 2017 08:30 AM

ADDED : மார் 21, 2017 11:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 23, 2017 08:30 AM ADDED : மார் 21, 2017 11:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:பா.ஜ., - எம்.பி.,க்கள், பார்லி மென்டுக்கு வராமல், 'மட்டம்' போடுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ள, பிரதமர் நரேந்திர மோடி, ''பா.ஜ.,வைச் சேர்ந்த எந்த உறுப்பினரை யும், எந்த நேரத்திலும் அழைப்பேன்; பார்லி., நிகழ்ச்சிகளில், அவர்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும்,'' என, வலியுறுத்தி உள்ளார்.

டில்லியில் நேற்று, பா.ஜ., பார்லிமென்ட் கட்சி கூட்டம் நடந்தது. இதில், பிரதமர் மோடி கூறியதாவது:பார்லி., நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டியது, பா.ஜ.,வைச் சேர்ந்த அனைத்து, எம்.பி.,க்களின் அடிப்படை கடமை. பா.ஜ.,வைச் சேர்ந்த, எம்.பி.,க்களை, எந்த நேரத்திலும் அழைப் பேன். பார்லி., நிகழ்ச்சிகளை

@nextcolumn@ தவிர்க்காமல், அவர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.

@Image@ஒவ்வொரு,எம்.பி.,யும், அவர் சார்ந்த தொகுதியின் லட்சக்கணக்கான மக்களின் பிரதிநிதியாக உள்ளார். மக்கள் சார்பாக, பார்லி., நடைமுறைகளில் பங்கேற்க வேண்டியது, அவரது தலையாய பணி. நாடு முழுவதும், பா.ஜ.,வைச் சேர்ந்த, அடிப்படை உறுப்பினர்கள் எண்ணிக்கை, 11 கோடி. இவர்கள், @nextcolumn@பஞ்சாயத்து, உள்ளாட்சி அமைப்புகள் மட்டத்தில், ஏப்., 6ல் நடக்கும் கூட்டங்களில் பங்கேற்க வேண்டும்.

இந்த கூட்டங்களில், அனைத்து, எம்.பி.,க்களும், அமைச்சர்களும், பா.ஜ.,நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும். அந்த கூட்டங்களில், அரசின் சாதனை கள் குறித்து, கட்சி நிர்வாகிகள் பேசுவர். சிறு வர்த்த கர்கள், தொழிலாளர்களை, பா.ஜ., தொண்டர்கள் நேரில் சந்தித்து, மின்ன ணுவியல் பரிவர்த்தனைக்கு உதவும், 'பீம்' ஆப் பற்றி விளக்கிக் கூற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். நாடு முழுவதும், ஏப்., 6 - 16 வரை, பா.ஜ., சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

இந்த கூட்டங்களின் போது, அம்பேத்கரின் சமத்துவ கொள்கையை, ஜன்தன் முத்ரா உள் ளிட்ட அரசு திட்டங்கள் மூலம், பிரதமர் மோடி தலைமையிலான, மத்திய அரசு நன வாக்கி இருப்பதை வலியுறுத்தும் வகையில், நிகழ்ச்சி கள் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத் தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us