தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ஒழுக்கத்தை கற்று தந்தது ஆர்.எஸ்.எஸ்., : அத்வானி

ஒழுக்கத்தை கற்று தந்தது ஆர்.எஸ்.எஸ்., : அத்வானி

ஒழுக்கத்தை கற்று தந்தது ஆர்.எஸ்.எஸ்., : அத்வானி


ADDED : மார் 27, 2017 06:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2017 06:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜெய்பூர்: தனக்கு ஒழுக்கத்தை கற்று தந்தது ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு தான் என பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி தெரிவித்தார்.

ராஜஸ்தானில், பிரம்மா குமாரிஸ் இயக்கம் துவங்கி 80 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து, சிறப்பு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரம்மா குமாரிஸ் தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி பேசியதாவது:

நான், கராச்சியில் தான் பிறந்தேன். ஆனால், ஒழுக்கம், நடத்தை, கல்வி ஆகியவற்றை, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு தான், எனக்கு கற்றுத் தந்தது. நாட்டுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும் என்ற உத்வேகத்தை எனக்கு அளித்தது, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு தான். தவறான காரியங்களை எப்போதும் முன்னெடுக்கக் கூடாது என்றும் ஆர்.எஸ்.எஸ்., மூலம்தான் கற்றுக் கொண்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us