தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/அமைச்சர் பதவி வேண்டாம்: அருண் ஜெட்லி

அமைச்சர் பதவி வேண்டாம்: அருண் ஜெட்லி

அமைச்சர் பதவி வேண்டாம்: அருண் ஜெட்லி


UPDATED : மே 29, 2019 03:54 PM

ADDED : மே 29, 2019 01:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 29, 2019 03:54 PM ADDED : மே 29, 2019 01:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி : உடல்நிலை காரணமாக மத்திய அமைச்சராக தொடர விரும்பவில்லை என நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

Image 2286567

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. நாளை (மே 30) பிரதமர் மோடி மற்றும் அவரது அமைச்சரவை பதவியேற்க உள்ளனர். தற்போது அமைச்சராக உள்ள பலருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தெரிகிறது. மேலும் புதியவர்கள் சிலரும் இடம் பெற வாய்ப்பு உள்ளது.

Image 693653

இந்நிலையில் தற்போது நிதி அமைச்சராக இருந்து வரும் அருண் ஜெட்லி, அமைச்சர் பதவியில் தொடர விரும்பவில்லை என பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு ஜெட்லி எழுதிய கடிதம்: கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றது பெருமை அளிக்கிறது. நிறைய அனுபவத்தை தருகிறது. இதற்கு முன்னரும், முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியிலும், கட்சியிலும், எதிர்க்கட்சியாக இருந்த போதும் எனக்கு பல பொறுப்புகள் வழங்கப்பட்டன. கூடுதல் பொறுப்புகளை இன்னும் கேட்க முடியாது.கடந்த 18 மாதமாக கடுமையான உடல்நிலை பாதிப்பை சந்தித்துள்ளேன். எனது டாக்டர்கள் அதிலிருந்து என்னை மீட்டுள்ளனர். பிரசாரம் முடிந்த பின்னர், நீங்கள் கேதர்நாத் சென்ற போது, தேர்தலுக்காக எனக்கு அளிக்கப்பட்ட பொறப்புகளில் இருந்து விலகி கொள்ள விரும்புகிறேன் என உங்களிடம் வாய்மொழியாக தெரிவித்தேன். எதிர்காலத்திலும், சில காலம் எந்த பொறுப்பையும் ஏற்காமல் விலகியிருக்க விரும்புகிறேன்.

இதன் மூலம் சிகிச்சை மற்றும் உடல்நிலையில் என்னால் கவனம் செலுத்த முடியும். பாஜ மற்றும் தேசியஜனநாயக கூட்டணி உங்கள் ஆட்சியின் கீழ் பெரிய வெற்றி பெற்றுள்ளது. நாளை புதிய அரசு அமைகிறது. இதனால், உங்களுக்கு நான் முறையாக கடிதம் எழுதுகிறேன். எனக்காகவும், எனது சிகிச்சைக்காகவும், எனது உடல்நிலைக்காகவும் நேரம் ஒதுக்க வேண்டும். இதனால், புதிய அரசில் எனக்கு எந்த பொறுப்பும் தேவையில்லை. இவ்வாறு அந்த கடிதத்தில் ஜெட்லி கூறியுள்ளார்.Image 693664Image 693665

அமித்ஷாவுக்கு வாய்ப்பு:


மத்தியில் மீண்டும் பா.ஜ.,வை ஆட்சிக்கு கொண்டு வந்ததில் அக்கட்சி தலைவர் அமித்ஷாவுக்கு முக்கிய பங்கு உள்ளது. இந்த சேவையை பாராட்டி அவருக்கு மத்திய நிதி அமைச்சர் தரப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us