UPDATED : செப் 09, 2011 07:05 PM
ADDED : செப் 09, 2011 07:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: திரைத்துறையில் நாட்டின் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் கே.
பாலச்சந்தருக்கு வழங்கப்பட்டது. டில்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் இவ்விருதை வழங்கினார். சிறந்த நடிகர் விருது தனுஷூக்கும், சிறந்த நடிகைக்கான விருது சரண்யாவுக்கும், சிறந்த இயக்குநருக்கான விருது வெற்றி மாறனுக்கும் வழங்கப்பட்டது. பிராந்திய மொழிப்படங்களில், சிறந்த தமிழ்ப்படத்திற்கான விருது தென் மேற்கு பருவக்காற்று படத்திற்கு வழங்கப்பட்டது. சிறந்த துணை நடிகருக்கான விருது மைனா படத்தில் நடித்த தம்பி ராமையாவுக்கு வழங்கப்பட்டது.