தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/'தூய்மை இந்தியா' திட்ட தூதராகும் வீராங்கனைகள்

'தூய்மை இந்தியா' திட்ட தூதராகும் வீராங்கனைகள்

'தூய்மை இந்தியா' திட்ட தூதராகும் வீராங்கனைகள்


UPDATED : செப் 06, 2016 04:56 AM

ADDED : செப் 04, 2016 10:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 06, 2016 04:56 AM ADDED : செப் 04, 2016 10:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:மத்திய அரசின், 'துாய்மை இந்தியா' திட்டத்தை பிரபலப்படுத்தும் பிரசாரத்திற்கு, ரியோ ஒலிம்பிக்கில் சாதனை புரிந்த, பி.வி. சிந்து, சாக் ஷி மாலிக் உள்ளிட்ட மூவரை பயன் படுத்துவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

@Image@இந்தியாவில் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், 'துாய்மை இந்தியா' இயக்கத்தை, 2014ல், பிரதமர் மோடி துவக்கி வைத்தார். நாடு முழுவதும், 4,000 நகரங்களில், தெருக்களை

@nextcolumn@ சுத்தப்படுத்துவதும், சுகாதார கட்டமைப்பை மேம் படுத்துவதும் இதன் நோக்கமாகும்.

இதை மக்களிடம் பிரபலப்படுத்தும் விதமாக, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்,சச்சின் டெண்டுல் கர்,அனில் அம்பானி உள்ளிட்ட பல்துறை சார்ந்த, 27 பேர் துாதர்களாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாட்மின்டன் வீராங்

கனை, பி.வி.சிந்து, மல்யுத்தப் போட்டியில் வெண் கலப்பதக்கம் வென்ற, சாக்ஷி மாலிக் மற்றும் ஜிம்னாஸ்டிக் போட்டியில் பதக்க வாய்ப்பை இழந்த, தீபா கர்மாகர் ஆகியோரையும், துாய்மை இந்தியா இயக்கபிரசாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, மத்திய சுகாதாரம் மற்றும் குடிநீர் துறை செயலர் பரமேஸ்வரன் கூறுகையில், ''ரியோ ஒலிம்பிக் போட்டியில் சாதனை புரிந்த இளம் வீரங்கனைகளை, துாய்மை இந்தியா @nextcolumn@இயக்கத்தின் பிரசாரத்திற்கு பயன்படுத்திக் கொள்வது குறித்து பரிசீலித்து வருகிறோம்.

இதுதொடர்பாக, மத்திய விளையாட்டுத் துறையை விரைவில் தொடர்பு கொள்ள முடிவு செய்துள்ளோம்,'' என்றார்.

இவர்கள் மூவருக்கும், சமீபத்தில், 'ராஜிவ் கேல் ரத்னா' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us