பார்லி.,யில் பன்னீர் அணி எம்.பி.,க்கள்... அசத்தல்!: தடுக்க முடியாமல் சசி அணியினர் தவிப்பு
பார்லி.,யில் பன்னீர் அணி எம்.பி.,க்கள்... அசத்தல்!: தடுக்க முடியாமல் சசி அணியினர் தவிப்பு
UPDATED : மார் 13, 2017 01:38 AM
ADDED : மார் 10, 2017 10:18 PM

ஒத்திவைப்பு தீர்மானம், கோஷங்கள், வெளிநடப்பு, போஸ்டர்கள் என, ஓ.பி.எஸ்., அணி, எம்.பி.,க்கள் ஏற்படுத்திய கடும் சூறாவளியில், சசிகலா அணி சிக்கியதால், பார்லிமென்டில் பரபரப்பு ஏற்பட்டது.
@Image@முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த விவகாரத்தை, ஓ.பி.எஸ்., அணி, எம்.பி.,க்கள் பார்லிமென்டில் கிளப்ப திட்ட மிட்டு, காலையில், சபாநாயகரிடம் ஒத்தி வைப்பு தீர்மான நோட்டீசை அளித்தனர். துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு விஷயம் தெரிய வர, உடனடியாக பார்லிமென்ட், அ.தி.மு.க., தலைவர் வேணுகோபால் வரவழைக்கப்படவே நிலைமை பரபரப்பானது.
சமாதான பேச்சு
தங்களது திட்டம் குறித்து மைய மண்டபத்தில் ஆலோசித்துக் கொண்டிருந்த, ஓ.பி.எஸ்., அணி, எம்.பி.,க்களிடம் வந்த இவர்கள், சமாதானம் பேச ஆரம்பித்தனர்.'நேற்று வரை ஒன்றாக இருந்தவர்கள் நாம். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில், அங்கு நாம், வேறு வழியின்றி எதிரெதிர் துருவத்தில் நிற்கிறோம். அதை பார்லிமென்டிலும் காட்ட வேண்டுமா. நமக்குள் ஏற்பட்ட பிளவு வெளியில் தெரிய வேண்டாமே' என, சசி அணி, எம்.பி.,க்கள் பரிதாபமாக கூறினர்.
அதை ஏற்க மறுத்த, ஓ.பி.எஸ்., அணி எம்.பி.,க்கள், 'அம்மாவின் மரணம் குறித்து தான் நியாயம் கேட்கிறோம். இதில் தவறே இல்லை. நீங்களும் அம்மாவால் உருவாக்கப் பட்டவர்கள் தான். உங்களுக்கு மனசாட்சி
@nextcolumn@ இருந்தால், எங்களுக்கு நீங்களும் ஆதரவு தர வேண்டும். அது முடியவில்லை என்றாலும், பரவாயில்லை. எங்களை தடுக்காதீர்கள்' என்று கூறினர். வேணுகோபாலின் சமாதானம் பயனளிக்க , வில்லை என்பதை, மற்ற எம்.பி.,க்க ளோடு சேர்ந்து தம்பிதுரையும் ஓரக்கண்ணால் பார்த்து கொண்டிருந்தார்.
லோக்சபா ஆரம்பித்ததும் நாமக்கல், எம்.பி., சுந்தரம் தலைமையில், எட்டு எம்.பி.,க்களும் கோஷங்கள்
போட ஆரம்பித்தனர். 'ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த
வேண்டும்' என, கோஷம் போட்டனர், அதோடு, ராஜாஜி ஹாலில் கிடத்தப்பட்டிருந்த,
ஜெ., உடலின் போட்டோக்களை பெரிய அளவில் பிடித்தபடி நின்றனர். இதற்கு சசி அணி, எம்.பி.,க்கள் சிறியளவில் எதிர்ப்பு தெரிவித்த படி நின்றனர். தம்பிதுரையும், வேணுகோபாலும் செய்வதறியாது திகைத்துப் போய் இருந்ததை காண முடிந்தது. பலத்த கோஷம் காரணமாக, அலுவல்கள் பாதிக்கப்படவே, சபை, 15 நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்டது.
வெளிநடப்பு
மீண்டும் சபை கூடியபோது பேசிய சுந்தரம், ''நாங்கள் அளித்த ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்,'' என கூறி கிளம்பவே, செங்குட்டுவன், பார்த்திபன், நட்டர்ஜி, வனரோஜா, சத்யபாமா, அசோக்குமார், கோபாலகிருஷ்ணன், மருதராஜா ஆகிய, எம்.பி.,க்கள் சபையை விட்டு வெளியேறினர்.
ராஜ்யசபாவிலோ, அலுவல்கள் துவங்கிய உடனே, ரகளை ஆரம்பித்தது. மைத்ரேயன், லட்சுமணன், சசிகலா புஷ்பா ஆகிய மூவரும், 'அம்மாவின் மரணத்திற்கு, சி.பி.ஐ., விசாரணை வேண்டும்' என்று சபையின் மையப் பகுதிக்கு சென்று போஸ்டர் களுடன் கோஷம் போட்டனர். தன்னை பேச அனுமதிக்க வேண்டுமென்று மைத்ரேயன் வாதம் செய்தார். ''ஜீரோ நேரத்தின் போது பேச, உங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள் ளது,'' என்று துணைத் தலைவர் குரியன் கூறவே, மைத்ரேயன்அமைதியாக இருக்கைக்கு திரும்பினார்.
@nextcolumn@
மூக்கறுபட்ட எம்.பி
:
ராஜ்யசபாவில், ஓ.பி.எஸ்.,அணி, எம்.பி., , மைத்ரேயன், பேசியபோது, சசி அணியை சேர்ந்தஎம்.பி., விஜிலா சத்யானந்த் கடுமை யாக குறுக்கிட்ட படியே இருந்தார். அதை
துளிகூட கண்டுகொள்ளாத மைத்ரேயன், தான் பேச வேண்டிய அனைத்தையும் கச்சிதமாக பேசியபடி இருந்தார்.
இந்த ஏமாற்றம் காரணமாக, அளவுக்கதிக மாகவே, மைத்ரேயன் பேச்சில் விஜிலா குறுக்கிட்டபடி இருந்தார். இவரை பலமுறை எச்சரித்தும் கேட்காமல் போகவே, கடும்
கோபமடைந்தார் குரியன்.
''விஜிலா, சபையை நடத்துவது நீங்களா, நானா? உங்கள் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? மைத்ரேயன் என்ன பேச வேண்டுமென்று முடிவு செய்ய நீங்கள் யார்? அவர் சபைக்குறிப்பில் ஏற முடியாத விஷயங் களை, வார்த்தைகளை கூறியிருந்தாலும் கூட, அது பதிவாகட்டும். அதை நான் நீக்க மாட்டேன்.
நீங்கள் நடந்து கொண்டது முற்றிலும் முறை யல்ல. வேறு யாராவது இவ்வாறு நடந்து கொண்டிருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுத்திருப்பேன். பெண் எம்.பி., என்பதால் உங்களை விடுகிறேன்,'' எனக் குரியன் கூறவே, சபையில் சில வினாடிகள் சலசலப்பு காணப்பட்டது.
பார்த்திபன் கலாய்ப்பு
லோக்சபாவின் மைய மண்டபத்தில், சமாதா னம் பேச வந்த எதிரணி, எம்.பி.,க் களிடம், ஓ.பி.எஸ்., அணியின் பார்த்திபன் எம்.பி., ''ஆட்சியும், கட்சியும் ஒரே நபரிடம் இருக்க வேண்டுமென்று கூறியபடியே இருந்தவர், இங்கே தான் நிற்கிறார்.
நாங்கள் உங்கள் அணிக்கு வர வேண்டு மெனில், ஒரு நிபந்தனை. ஆர்.கே.நகரில் இவர் நிற்கட்டும். நாங்கள் அணி மாறி வந்து, தேர்தல் வேலை செய்கிறோம்,'' என்று கூறினார். இவர் குறிப்பிட்டது, துணை சபாநாயகர், தம்பிதுரையை.
- நமது டில்லி நிருபர் -
