தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/தோல்விக்கு மீடியாக்களே காரணம்: முலாயம் சிங்

தோல்விக்கு மீடியாக்களே காரணம்: முலாயம் சிங்

தோல்விக்கு மீடியாக்களே காரணம்: முலாயம் சிங்


ADDED : ஏப் 17, 2017 05:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2017 05:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லக்னோ: உ.பி., சட்டசபை தேர்தலில் சமாஜ்வாதி கட்சி தோல்வி அடைந்ததற்கு மீடியாக்களே காரணம் என அக்கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் குற்றம் சாட்டினார்.

நடந்து முடிந்த உ.பி., சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பா.ஜ., ஆட்சியை கைபற்றியது. அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சிக்கு வெறும் 47 இடங்களே கிடைத்தன.

மீடியாக்களே காரணம்:


இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் தெரிவித்ததாவது: உ.பி.,யில், அகிலேஷ் தலைமையில் நடந்த ஆட்சியில், பல நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆனால், சமாஜ்வாதி கட்சியில், குடும்பத்துக்குள் ஏற்பட்ட சண்டையை மட்டும், மீடியாக்கள் பெரிதுபடுத்தின. இதனால்தான், உ.பி.,யில் தோல்வியடைந்தோம். கட்சியின் தலைமை மாறியது தோல்விக்கு காரணமில்லை. 'மோடியை பின்தொடருவோம், மோடியை பின்தொடருவோம்' என்று கூறியே மக்களை பா.ஜ., முட்டாளாக்கி விட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us