ADDED : செப் 03, 2011 09:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அய்ஸ்வால்: மிசோரம் மாநில புதிய கவர்னராக வைக்கம் புருஷோத்தமன் பதவியேற்றுக்கொண்டார்.
83 வயதான புருஷோத்தமனுக்கு கவுகாத்தி ஐகோர்ட் தலைமை நீதிபதி மதன் பீமாராவ் லோகூர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விழாவில், மாநில முதல்வர் லால் தன்வாலா மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். மூத்த காங்கிரஸ் தலைவரான வைக்கம் புருஷோத்தமன் கேரளாவைச் சேர்ந்தவர். லோக்சபா உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.

