ADDED : ஜன 19, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜயோக கணபதிக்குசங்கடஹர சதுர்த்தி
அரவக்குறிச்சி,:அரவக்குறிச்சியில், ராஜயோக கணபதிக்கு நேற்று முன்தினம் இரவு சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபெற்றது.
அரவக்குறிச்சி, கங்கா நகரில் உள்ள ராஜயோக கணபதி ஆலயத்தில், சங்கடகர சதுர்த்தி பூஜை நடைபெற்றது. ஆலயத்தில் குடிகொண்டு இருக்கும், ராஜயோக கணபதிக்கு எண்ணெய் காப்பு செய்து, துாய நீரால் நீராட்டி திரவியத்துாள், மஞ்சள், சந்தனம், சர்க்கரை, பச்சரிசி மாவு, தேன், இளநீர், பால்,தயிர், நெய், பன்னீர் போன்ற, 18 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின், புது வஸ்திரம் சாற்றி வாசனை மலர்களாலும், அருகம்புல் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்து, அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அபிஷேக ஆராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

