புதுச்சேரி சட்டசபையிலிருந்து அ.தி.மு.க., வெளிநடப்பு
புதுச்சேரி சட்டசபையிலிருந்து அ.தி.மு.க., வெளிநடப்பு
ADDED : ஆக 24, 2011 10:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி சட்டசபையிலிருந்து அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.
2011-12ம் ஆண்டுக்கான புதுச்சேரி பட்ஜெட்டை மாநில முதல்வர் ரங்கசாமி இன்று தாக்கல் செய்தார். இது புதுச்சேரி அரசின் 50வது பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட்டில் பல நலத்திட்டங்களை அவர் அறிவித்தார். இந்நிலையில், இதற்கு முன் அறிவித்த திட்டங்களை ரங்கசாமி செயல்படுத்தவில்லை என கூறி, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சபாநாயகரை முற்றுகையிட்டதுடன், சட்டசபையிலிருந்தும் வெளிநடப்பு செய்தனர்.