குண்டு வெடிப்பில் சிக்கிய 7 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை
குண்டு வெடிப்பில் சிக்கிய 7 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை
ADDED : அக் 07, 2011 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: டில்லி ஐகோர்ட் வளாகத்தில் கடந்த மாதம் 7ம் தேதி, குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது.
இதில் சிக்கி 15 பேர் பலியாகினர்; 76 பேர் காயமடைந்தனர். குண்டு வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த சிலர், உடல் உறுப்புகளை இழந்து ஊனமாகியுள்ளனர். காயம டைந்தவர்களில் பெரும்பாலானோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நிலையில், எய்ம்ஸ் மற்றும் ராம் மனோகர் லோகியா மருத்துவமனைகளில், ஏழு பேர் மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், 'சிகிச்சை பெறும் ஏழு பேரில், இரண்டு பேருக்கு உடல்நிலை தேறி வருகிறது; ஐந்து பேர் அபாய கட்டத்திலேயே உள்ளனர்' என தெரிவித்தனர்.

