'முத்ரா யோஜனா' உச்சவரம்பு ரூ.20 லட்சமாக அதிகரிப்பு
'முத்ரா யோஜனா' உச்சவரம்பு ரூ.20 லட்சமாக அதிகரிப்பு
ADDED : ஜூலை 24, 2024 04:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்டு வரும் 'முத்ரா' கடன் வரம்பை, தற்போதுள்ள 10 லட்சம் ரூபாயிலிருந்து, 20 லட்சம் ரூபாயாக இரட்டிப்பாக்குவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறு, குறு தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்டு வரும் 'பிரதம மந்திரி முத்ரா யோஜனா' திட்டத்தின் கடன் வரம்பு, தற்போதுள்ள 10 லட்சம் ரூபாயிலிருந்து, 20 லட்சம் ரூபாயாக இரட்டிப்பாக்கப்படுகிறது.
பிணையமில்லாத சிறு கடன்கள் வழங்குவதற்கான இத்திட்டத்தை, பிரதமர் மோடி கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், சிறு நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவை கடன்களை வழங்கி வருகின்றன.