ADDED : செப் 03, 2024 01:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: அரசு முறைப்பயணமாக புருனே, சிங்கப்பூர் நாடுகளுக்கு பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொள்கிறார்.
இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்தியா -புருனே இடையே நட்புறவு ஏற்பட்டதன் 40-ம் ஆண்டையொட்டி இன்று (செப்.03,) பிரதமர் மோடி அரசு முறைப்பயணமாக புருனே புறப்பட்டு செல்கிறார். அங்கு புருனே சுல்தான் ஹசனல் போல்க்கையாவை சந்தித்து இரு தரப்பு பரஸ்பரம் நட்புறவு குறித்து விவாதிக்கிறார்.
பின்னர் செப். 04, 05ம் தேதிகளில் சிங்கப்பூர் செல்கிறார். இந்தியா -சிங்கப்பூர் இடையேயான நட்புறவை வலுப்படுத்தும் விதமாக ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்தியா -சிங்கப்பூர் அமைச்சர்கள் மட்டத்திலான வட்டமேசை மாநாடு நடைபெற உள்ளது. இதில் மோடி பங்கேற்கிறார்.