வாக்குப்பதிவு சதவீத குளறுபடி: தேர்தல் ஆணையரிடம் புகார் கூற ‛‛இண்டியா கூட்டணி'' முடிவு
வாக்குப்பதிவு சதவீத குளறுபடி: தேர்தல் ஆணையரிடம் புகார் கூற ‛‛இண்டியா கூட்டணி'' முடிவு
UPDATED : மே 09, 2024 08:54 PM
ADDED : மே 09, 2024 08:42 PM

புதுடில்லி: லோக்சபா தேர்தலில் வாக்குப்பதிவு சதவீத்தில் குளறுபடி தொடர்பாக ‛‛இண்டியா கூட்டணி'' தலைவர்கள் நாளை தலைமை தேர்தல் ஆணையரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள பாராளுமன்ற லோக்சபா தேர்தலில் மூன்று கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளன. ஏழாம் கட்ட தேர்தல் ஜூன்01-ல் நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை ஜூன் 04-ம் தேதி நடக்கிறது.
இந்நிலையில் இதுவரை நடந்து முடிந்த மூன்று கட்ட தேர்தல்களில் பதிவான வாக்கு சதவீத்தினை வெளியிடுவதில் மாநில தேர்தல் ஆணையம் குளறுபடி செய்வதாக இக்கூட்டணி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதையடுத்து நாளை (மே.10) டில்லி தலைமை தேர்தல் ஆணையரை ‛இண்டியா கூட்டணி ''யை ச்சேர்ந்த தலைவர்கள் சந்தித்து வாக்குப்பதிவு சதவீதம் வெளியிடுவதில் ஏற்பட்டு வரும் குளறுபடி குறித்து விவரங்களை தெரிவிக்கின்றனர்.
மேலும் தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ மத விவகாரங்களை பயன்படுத்துவது குறித்தும் தேர்தல் ஆணையத்திடம் 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் புகார் தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.