ADDED : அக் 05, 2011 10:22 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு : மூணாறு அருகே குண்டளை அணையில் கேரள மின்வாரியத்தினர் ஹைடல் டூரிசம் சார்பில் சுற்றுலா படகுகள் இயக்கப்படுகிறது.
ஏழுபெடல் படகுகளும், துடுப்பு மற்றும் காஷ்மீரியா சிக்காரிய வகை படகுகளும்உள்ளன. அணையை சுற்றிலும் மரங்களால் சூழப்பட்டு, நீர் தேக்கத்தில் ரம்யமான தோற்றமும்,அமைதியும் சுற்றுலா பயணிகளை படகு சவாரி செய்ய தூண்டும். இங்கு இயக்கப்படும் படகுகளில் காஷ்மீரியா சிக்காரிய வகை படகுகள் மிகவும் பிரசித்து பெற்றது. இதில் பயணிப்பதை தேனிலவு தம்பதியினர் பெரிதும் விரும்புகின்றனர்.

