மும்பையில் ரூ.11 கோடி மதிப்புள்ள தங்கம், வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்: சுங்கத்துறை அதிரடி
மும்பையில் ரூ.11 கோடி மதிப்புள்ள தங்கம், வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்: சுங்கத்துறை அதிரடி
ADDED : ஜூலை 17, 2024 12:34 PM

மும்பை: மும்பை விமான நிலையத்தில், கடந்த 4 நாட்களில் ரூ.11 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை விமான நிலையத்தில் போதைப்பொருட்கள் மற்றும் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, கடந்த ஜூலை 10ம் தேதி முதல் ஜூலை 14ம் தேதி வரை சுங்கத்துறை அதிகாரிகள், பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.
வெளிநாட்டு கரன்சிகள்
இது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ரூ.11 கோடி மதிப்புள்ள 13.24 கிலோ தங்கம் மற்றும் மொபைல் போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 45 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
ரூ.11 கோடி
பயணிகள் உடைகளில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஏழு பயணிகள் கைது செய்யப்பட்டனர். கடந்த 4 நாட்களில், மொத்தம் ரூ.11 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.