11 பேர் இறப்பு : போலீஸ் உடல் தகுதி தேர்வை நிறுத்தி வைக்க உத்தரவு
11 பேர் இறப்பு : போலீஸ் உடல் தகுதி தேர்வை நிறுத்தி வைக்க உத்தரவு
ADDED : செப் 03, 2024 02:10 AM

ராஞ்சி: ஜார்க்கண்டில் போலீஸ் உடல் தகுதி தேர்வில் பங்கேற்ற 11 தேர்வர்கள் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் எதிரொலியாக தேர்வை நிறுத்தி வைக்க முதல்வர் ஹேமந்த் சோரன் உத்தரவிட்டார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 583 போலீஸ் வேலைக்கு உடல் தகுதி தேர்வு மாநிலம் முழுதும் 7 இடங்களில் கடந்த ஆக.22-ல் துவங்கி நடைபெற்று வருகிறது. ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 772 பேர் பங்கேற்றனர்.
இவர்களுக்கு நேற்று (செப்.,02) நடைபெற்ற உடல் தகுதி தேர்வின் போது 10 கி.மீ ஓட்டம் வைக்கப்பட்டது. கடும் வெயிலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் சிலர் மயங்கி விழுந்தனர். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 11 பேர் பரிதாபமாக இறந்தனர்.இதற்கு பல்வேறு காரணங்கள் போலீசாரால் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் முதல்வர் ஹேமந்த் சோரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மூன்று நாட்கள் தேர்வை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளேன். இறந்தவர்கள் குறித்த காரணத்தை அறிக்கையாக அளிக்குமாறு சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார்.