UPDATED : ஆக 15, 2011 09:23 AM
ADDED : ஆக 15, 2011 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி:ஜிப்மர் மருத்துவமனையில், திண்டிவனத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு, ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்தன.
திண்டிவனம் அடுத்த முட்டியூரைச் சேர்ந்தவர் சந்திரசேகரன், தையல் தொழில் பார்க்கிறார். இவரின் மனைவி நித்யா,23. நிறைமாத கர்ப்பிணியான இவர், கடந்த 15 நாட்களுக்கு முன், ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.அங்கு, நித்யாவிற்கு நேற்று மதியம் 2 மணிக்கு, இரண்டு பெண், ஒரு ஆண் என, மூன்று குழந்தைகள் பிறந்தன. மூன்று குழந்தைகளும், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளன.