உ.பி.யில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் பலி
உ.பி.யில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் பலி
ADDED : செப் 07, 2024 07:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லக்னோ: உ.பி.யில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் 4 பேர் பலியாயினர். உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் போக்குவரத்து நகர் உள்ளது.
இங்கு மூன்று மாடி கொண்ட கட்டடம் திடீரென சரிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 4 பேர் சம்பவ இடத்தில் பலியானதாகவும், பலர் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர், மற்றும் மாநில தீயணைப்பு படையினர் விரைந்தை வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.கட்டட இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.