மோடி பொதுக்கூட்டத்தில் குண்டு வெடிப்பு : 4 குற்றவாளிகள் மரண தண்டனை ஆயுளாக குறைப்பு
மோடி பொதுக்கூட்டத்தில் குண்டு வெடிப்பு : 4 குற்றவாளிகள் மரண தண்டனை ஆயுளாக குறைப்பு
ADDED : செப் 11, 2024 11:39 PM

பாட்னா: பீஹாரில் பிரதமர் மோடி பங்கேற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் 4 குற்றவாளிகளின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி பாட்னா ஐகோர்ட் உத்தரவிட்டது.
கடந்த 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பா.ஜ., பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து 2013-ம் தேதி பீஹார் மாநிலம் பாட்னாவில் காந்தி மைதானத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் நரேந்திர மோடி பங்கேற்க திட்டமிட்டிருந்த நிலையில் பல்வேறு இடங்களில் பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் பலர் பலியாயினர்.
தேசிய புலனாய்வு ஏஜென்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். சிறப்பு என்.ஐ.ஏ., சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்த வழக்கில் 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து பாட்னா உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்ட வழக்கினை விசாரித்த தனி நீதிபதி ஆஷூதேஷ் குமார், 4 குற்றவாளிகளுக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி உத்தரவிட்டார்.