பூமி பூஜையுடன் துவங்கியது தாராவி மறு சீரமைப்பு திட்ட பணிகள்
பூமி பூஜையுடன் துவங்கியது தாராவி மறு சீரமைப்பு திட்ட பணிகள்
ADDED : செப் 12, 2024 11:58 PM

மும்பை: ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான மும்பை தாராவி மறு சீரமைப்பு திட்டத்திற்கான பூமி பூஜை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை: ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக, மும்பை தாராவி பகுதி கருதப்படுகிறது. 600 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் இந்த பகுதியில் லட்சகணக்கான குடிசைவீடுகள், ஏராளமான சிறு தொழில், மருந்துகள், தோல், காலணி, துணி உள்ளிட்ட தொழில்களுக்கான மையமாக தாராவி உள்ளது.
தாராவியில் தமிழர்கள் உள்பட சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிப்பதாகவும், தராவி ஆசியாவின் மிகப்பெரிய குடிசை ப்பகுதி எனவும் கூறப்படுகிறது.
கடந்த 15 ஆண்டுகளாக இந்த பகுதியை மறுசீரமைக்க 4 முறை ஏலம் விட மஹாராஷ்டிரா அரசு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தற்போதைய அரசு அதற்கான முயற்சியில் மீண்டும் இறங்கியுள்ளது.
இதையடுத்து டி.ஆர்.பி.பி.எல். எனப்படும் தாராவி மறு சீரமைப்பு திட்டத்திற்கான ஒப்பந்தத்தை முன்னணி நிறுவனம் பெற்றுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கட்டுமான பணிகளை துவக்க பூமிபூஜை இன்று நடந்தது. முதற்கட்டமாக செக்டர் 6 பகுதியில் 47 ஏக்கர் பரப்பளவில் ரயில்வே ஊழியர்களுக்காக 850 குடியிருப்புகள் கட்டப்பட உள்ளது.
முன்னதாக இத்திட்டத்திற்காக சர்வே எனப்படும் நில அளவை பணிகள் துவங்கியுள்ளன. 7 ஆண்டுகளுக்கு பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

