பிரதமராகும் வாய்ப்பை நிராகரித்துவிட்டேன்: உண்மையை போட்டுடைத்த கட்கரி
பிரதமராகும் வாய்ப்பை நிராகரித்துவிட்டேன்: உண்மையை போட்டுடைத்த கட்கரி
ADDED : செப் 15, 2024 02:56 AM

நாக்பூர்: என்னை ஒரு அரசியல் தலைவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க விரும்பினார். அந்த வாய்ப்பை ஏற்க நான் மறுத்துவிட்டேன் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியின் போது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியது,
பிரதமர் பதவிக்காக நான் கனவு கண்டதில்லை. ஆசைப்பட்டதும் இல்லை. ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு வந்தது எனக்கு நினைவிக்கிறது.
முக்கிய அரசியல் தலைவர் ஒருவர் (அந்த அரசியல் தலைவர் பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை) பிரதமர் வேட்பாளர் பதவிக்கு விரும்பினால் என்னை ஆதரிப்பதாக தெரிவித்தார். அந்த வாய்ப்பை ஏற்க மறுத்து நிராகரித்துவிட்டேன். பிரதமர் பதவி எனது லட்சியம் அல்ல.
நான் சார்ந்துள்ள அமைப்புக்கு என்றும் நம்பிக்கையாக இருப்பேன். பிரதமர் பதவிக்காக யாரிடமும் சமரசம் செய்ய போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.