நடப்பு நிதியாண்டில் ரூ. 6.93 லட்சம் கோடி நேரடிவரி வசூல்
நடப்பு நிதியாண்டில் ரூ. 6.93 லட்சம் கோடி நேரடிவரி வசூல்
UPDATED : ஆக 13, 2024 08:03 PM
ADDED : ஆக 13, 2024 07:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் நேரடி வரிகள் மூலம் ரூ. 6.93 லட்சம் கோடி வசூலாகியுள்ளதாகவும், இது 22.5 சதவீத வளர்ச்சி என தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டிருப்பதாவது, 2024-25 ம் நிதியாண்டில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஆக.11ம் தேதி வரை நேரடி வரிகள் மூலம் தனிநபர் வருமான வரியாக ரூ. 4.47 லட்சம் கோடியும், கார்பரேட் நிறுவனங்களின் வரியாக ரூ. 2.22 லட்சம் கோடியும், பங்குபரிவர்த்தனை வரியாக ரூ. 21 ஆயிரத்து 599 கோடியும், பிற இனங்கள் வரியாக ரூ. 1,617 கோடி என நேரடி வரியாக ரூ.6.93 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. இது 22.5 சதவீத உயர்வு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

