சி.பி.ஐ., கைதுக்கு எதிராக கெஜ்ரிவால் வழக்கு: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
சி.பி.ஐ., கைதுக்கு எதிராக கெஜ்ரிவால் வழக்கு: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
ADDED : ஆக 13, 2024 08:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சி.பி.ஐ., தன்னை கைது செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
டில்லி ஆம் ஆத்மி அரசு கொண்டு வந்த புதிய மதுபான கொள்ளை வழக்கில் நடந்த முறைகேட்டை அமலாக்கத்துறை, சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இதில் பணமோசடி வழக்கில் கடந்த மார்ச் மாதம் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டில்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது, சிபிஐ வழக்குப்பதிவு செய்து கடந்த ஜூன் 26-ம் தேதியன்று திகார் சிறையில் வைத்து கெஜ்ரிவாலை கைது செய்தது.
தன்னை சிபிஐ கைது செய்தது சட்டவிரோதம் என உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கு நாளை (ஆக.14) விசாரணைக்கு வருகிறது.

