லவ் ஜிஹாத்தில் ஈடுபட்டால் ஆயுள் : அசாமிலும் விரைவில் சட்டம் அமல்
லவ் ஜிஹாத்தில் ஈடுபட்டால் ஆயுள் : அசாமிலும் விரைவில் சட்டம் அமல்
UPDATED : ஆக 04, 2024 08:34 PM
ADDED : ஆக 04, 2024 07:44 PM

கவுஹாத்தி: உ.பி.யை போன்று அசாமிலும் லவ் ஜிகாதியில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் மசோதா விரைவில் கொண்டு வரப்படும் என அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறினார்.
முஸ்லிம் அல்லாத பெண்களை, இஸ்லாமிய மதத்திற்கு மதமாற்றம் செய்யும் நோக்கில் காதலித்து திருமணம் செய்வது, 'லவ் ஜிஹாத்' எனப்படுகிறது.
இது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை அளிக்கும் வகையில், சட்டத்திருத்த மசோதாவை, உ.பி.யில் சட்டசபையில் மாநில அரசு அறிமுகப்படுத்தி நிறைவேற்றியது.
இந்நிலையில் இன்று (ஆக.,4) நடந்த அசாம் மாநில பா.ஜ. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வஸ் சர்மா பேசுகையில், லவ் ஜிஹாத்தில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் சட்ட திருத்த மசோதா விரைவில் கொண்டு வரப்படும். அசாமில் பிறந்தவர்கள் மட்டுமே அரசுப்பணிக்கு தகுதியானவர். குடியுரிமை கொள்கை விரைவில் அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.