தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ மோடி இன்று வயநாடு வருகை

மோடி இன்று வயநாடு வருகை

மோடி இன்று வயநாடு வருகை


ADDED : ஆக 10, 2024 01:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2024 01:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வயநாடு; வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட இன்று பிரதமர் மோடி. வயநாடு வருகை தர உள்ளார்.

கேரள மாநிலம். வயநாடு மாவட்டத்தில் கடந்த, 30ம் தேதி முண்டக்கல், சூரல்மலை ஆகிய இரு பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவில், மாவட்டத்தின் சில பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், இதுவரை இல்லாத வகையில் பெருமளவிலான உயிரிழப்புகளும், சொத்து சேதங்களும் ஏற்பட்டன. இதுவர 400க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி இன்று (ஆக.10) பார்வையிட கேரளா வருகிறார்.

கண்ணுர் வழியாக விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் நிலச்சரிவு பகுதிகளை பார்வையிடுகிறார். பின்னர் ராணுவத்தினர் கட்டியுள்ள இரும்பு பாலத்தையும் பார்வையிடுகிறார். தொடர்ந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களை சந்தித்து பேசுகிறார்.

மோடியுடன் கவர்னர் ஆரிப் முகமதுகான், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us