எனது மானம், மரியாதை உங்கள் கையில் தான் உள்ளது: ஒமர் அப்துல்லா
எனது மானம், மரியாதை உங்கள் கையில் தான் உள்ளது: ஒமர் அப்துல்லா
ADDED : செப் 04, 2024 10:59 PM

ஸ்ரீநகர்: என்னுடைய மானம், மரியாதை எல்லாம் உங்கள் கையில் தான் இருக்கு என காஷ்மீர் தேர்தலில் வேட்புமனுவை தாக்கல் செய்த தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஒமர் அப்துல்லா தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீருக்கு செப்.18, செப்.25. அக்.01 ஆகிய மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. பிரதான மாநில கட்சியான பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி, காங்., குடன் கூட்டணி வைத்துள்ளது. இங்கு கேண்டர்பால் தொகுதியில் போட்டியிட வேண்டி தேசிய மாநாட்டு கட்சியின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா வேட்புமனு தாக்கல் செய்த பின் கூறியது,
16 வருடங்களுக்கு பின் இத்தொகுதியில் நான் போட்டியிடுகிறேன். 2016-ம் ஆண்டிலிருந்து இத்தொகுதி மக்கள் எந்த அடிப்படை வசதியும் கிடைக்காமல் பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். எம்.எல்.ஏ.வாக உங்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பு தாருங்கள், எனது மானம், மரியாதை, என் தலையில் உள்ள குல்லா எல்லாமே உங்கள் கையில் தான் இருக்கு.