நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:தென்மேற்கு டில்லியில், வீட்டில் இறந்து கிடந்த வாலிபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சாவ்லா ஷியாம் விஹாரில் வசித்தவர் அமித் ராவத்,33. நேற்று காலை தன் வீட்டில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து சென்றனர். அமித் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வீட்டில் அமித் மனைவி கரிஷ்மா இல்லை. வீடு முழுதும் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். விசாரணை நடக்கிறது.