ADDED : பிப் 23, 2025 11:43 PM

தேர்தல் நெருங்குவதால், பிரதமர் மோடி
பீஹார் வருவதாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். அவர் பீஹாருக்கு மட்டும்
வரவில்லை, தேர்தல் இல்லாத மத்திய பிரதேசத்திற்கு நேற்று சென்றார். இன்று
பீஹார் வந்துவிட்டு, தேர்தல் நடக்காத அசாமுக்கும் செல்கிறார். அவர்,
பங்களாவில் முடங்குபவர் அல்ல.
சிவ்ராஜ் சிங் சவுகான், மத்திய அமைச்சர், பா.ஜ.,
நல்லது செய்யமாட்டார்கள்!
வளர்ந்த பாரதம் என்ற நிலையை அடையும் வரை, நாட்டில் தாமரையின் புயல் தொடரும். நாட்டு மக்கள் இப்போது, மோடியையும் பா.ஜ.,வையும் மட்டுமே நம்பியுள்ளனர். வாரிசு அரசியல் மற்றும் ஒரு சமூகத்தினரை மட்டும் தாஜா பண்ணும் அரசியல் செய்யும் அகிலேஷ், ராகுலால் நாட்டுக்கு நல்லது செய்ய முடியாது.
கேசவ் பிரசாத் மவுர்யா, உத்தர பிரதேச துணை முதல்வர், பா.ஜ.,
நிதிஷ் தகுதியானவரா?
பீஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார், தன் தந்தை முழு உடல் தகுதியுடன் இருப்பதாக கூறியுள்ளார். மீண்டும் அவரை முதல்வராக்க வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் தற்போது அவர்களது கூட்டணியில் உள்ள பிரதமர் மோடி, சிராக் பஸ்வான் ஆகியோரே நிதிஷ் உடல்நலன் குறித்து முன்புவிமர்சித்தனர்.
தேஜஸ்வி யாதவ், தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்

