ரூ.26 ஆயிரம் கோடியில் 240 ஏரோ என்ஜின்கள் வாங்க ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம்
ரூ.26 ஆயிரம் கோடியில் 240 ஏரோ என்ஜின்கள் வாங்க ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம்
ADDED : செப் 09, 2024 11:32 PM

புதுடில்லி: சுகோய் 30-எம்.கே.1 ஏரோ என்ஜின்கள் வாங்க எச்.ஏ.எல். நிறுவனத்துடன் ராணுவ அமைச்சகம் ரூ. 26 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
ஹால் எனப்படும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனம் ஒடிசாவின் கோராபுட் என்ற இடத்தில் சுகோய் 30- எம்.கே. ரக போர் விமான என்ஜின்களை தயாரிக்கிறது.
இந்நிறுவனத்திடமிருந்து 240 ஏரோ என்ஜின்களை வாங்குகிறது மத்திய ராணுவ அமைச்சகம், இதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாதுகாப்பு துறை செயலர் கிரிதர் அரமனே மற்றும் விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் விஆர் சவுதாரி ஆகியோர் முன்னிலையில் ரூ. 26 ஆயிரம் கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின்படி ஆண்டுக்கு 30 ஏரோ என்ஜின்கள் என எட்டு ஆண்டுகளில் 240 என்ஜின்களையும் எச்.ஏ.எல். நிறுவனம் சப்ளை செய்கிறது. முன்னதாக இந்த ஒப்பந்தத்திற்கு பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை குழு ஒப்புதலை வழங்கியது.
*****************