ADDED : ஆக 26, 2024 10:24 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: போலாந்து, உக்ரைன் பயணம் தொடர்பாக பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோபைடனுடன் தொலைபேசியில் விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி சமீபத்தில் அரசு முறைப்பயணமாக போலந்து மற்றும் உக்ரைன் சென்றார். இப்பயணத்தின் போது ரஷ்ய -உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார்.
தனது பயணம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோபைடனுடன் தொலை பேசியில் விவாதித்தார்.
அவர், கூறியுள்ளதாவது:அமெரிக்க அதிபர் ஜோபைடனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது வங்கதேசத்தில் பாதுகாப்பு , அரசியல் சூழல் குறித்தும் , உக்ரைன் போரை நிறுத்துவது குறித்தும் விவாதித்தேன். இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.