கர்நாடகாவில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வில் வன்முறை :
கர்நாடகாவில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வில் வன்முறை :
ADDED : செப் 12, 2024 01:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: கர்நாடகாவில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வில் இரு பிரிவினரிடையே மோதல் வன்முறையாக வெடித்தது. அங்கு பதற்றம் காணப்படுகிறது.
கர்நாடகாவில் மாண்டியாவில் விநாயக சதூர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் கரைப்பு நிகழ்ச்சி நாகமங்கலம் என்ற இடத்தில் நேற்று மாலை நடைபெற்றது. அப்போது பத்ரிகொப்பாலு என்ற கிராமத்தில், மசூதி அருகே வந்த போது இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இரு தரப்பும் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர்.
பலருக்கு காயம் ஏற்பட்டது. இதில் ஏராளமான கடைகள் , வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதனால் அந்த இடம் போர்க்களமாக மாறியுள்ளது. மாண்டியா மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

