பாண்டியனால் கட்சியில் பிளவா ?: நவீன் பட்நாயக் மறுப்பு
பாண்டியனால் கட்சியில் பிளவா ?: நவீன் பட்நாயக் மறுப்பு
ADDED : ஜூலை 22, 2024 11:06 PM

புவனேஸ்வரம்: வி.கே. பாண்டியனால் கட்சியில் பிளவு ஏதும் இல்லை என ஒடிசா மாநில பிஜூ ஜனதா தள கட்சி தலைவர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
ஒடிசாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பிஜூ ஜனதா தளம் தோல்வியை சந்தித்தது, பா.ஜ. பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
தேர்தல் தோல்வி எதிரொலியாக பிஜூ ஜனதா தளம் கட்சியில் பிளவு ஏற்பட்டதாகவும், அதற்கு காரணம் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி வி.கே. பாண்டியன் கூறப்பட்டது.
இது குறித்து முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் கூறியது, பிஜு ஜனதா தளம் கட்சியில் வி.கே.பாண்டியனால் பிளவு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் வதந்தி. நான் ஏற்கனவே கூறியது போல், ஒடிசாவுக்கும், கட்சிக்கும் அர்ப்பணிப்புடனும், திறமையுடனும், நேர்மையுடனும் அவர் சேவை ஆற்றியுள்ளார். அவரைப் பற்றி வதந்தியை பரப்பக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.