UPDATED : செப் 03, 2024 08:23 PM
ADDED : செப் 03, 2024 08:09 PM

அகர்தலா : நாடு முழுவதும் பா.ஜ., உறுப்பினராக 10 கோடி பேர்களை சேர்ப்பது என்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என திரிபுரா முதல்வர் மாணிக் ஷாகா தெரிவித்தார்.
இது குறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது: நாடு முழுவதும் பா.ஜ., உறுப்பினராக 10 கோடி பேர்களை சேர்ப்பது என்றும் திரிபுரா மாநிலத்தில் மட்டும் 12 லட்ம் பேரை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதற்கான பணி இன்று ( செப்.,3) முதல் மாநிலத்தில் துவக்கப்பட்டு உள்ளது என்றார்.
முன்னதாக 'சங்கதன் பர்வா, சதாஸ்யதா அபியான் 2024' வெளியீட்டு விழாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக உலகின் மிகப்பெரிய கட்சி மட்டுமல்ல, தனித்துவமான கட்சி, மேலும் மிகவும் ஜனநாயகக் கட்சியும் கூட. பாஜகவைப் போல வெளிப்படைத்தன்மையுடனும் நேர்மையுடனும் வேறு எந்தக் கட்சியும் உறுப்பினர் சேர்க்கை நடத்துவதில்லை' என்று அவர் கூறினார்.
மேலும் ஜெ.பி.,நட்டா கூறுகையில் உறுப்பினர் சேர்க்கையின் ஒரு பகுதியாக தற்போதுள்ள பாஜக உறுப்பினர்களும் தங்கள் உறுப்பினர்களை புதுப்பிக்க வேண்டும். உறுப்பினர் சேர்க்கை 10 கோடியை நிச்சயமாக தாண்டும் என கூறினார்.