ADDED : ஆக 19, 2024 01:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் காசியாபாதில் இருந்து சரக்கு வேன் ஒன்றில் தொழிலாளர்கள் சிலர், ரக் ஷா பந்தன் கொண்டாட்டத்திற்காக அலிகார் மாவட்டத்தில் உள்ள சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.
நேற்று காலை, மீரட் நெடுஞ்சாலையில் சலேம்பூர் பகுதியில் அந்த வேன் சென்றபோது எதிரே வந்த தனியார் பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; 27 பேர் காயம் அடைந்தனர். போலீசார் கூறுகையில், 'விபத்தில் காயம் அடைந்தவர்களில் ஒன்பது பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் மேல் சிகிச்சைக்காக மீரட் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். பலியானவர்களில் இருவரது உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை' என்றனர்.