பள்ளத்தாக்கில் கவிழ்ந்த கார் காஷ்மீரில் 10 பேர் பலி
பள்ளத்தாக்கில் கவிழ்ந்த கார் காஷ்மீரில் 10 பேர் பலி
ADDED : மார் 29, 2024 11:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனிஹால்: காஷ்மீரின் ஸ்ரீநகரிலிருந்து 10 பேர் உடைய குழுவினர் 'டவேரா' காரில் ஜம்மு நோக்கி நேற்று அதிகாலை சென்றனர்.
அதிகாலை, 1:30 மணி அளவில் அந்த கார், ரம்பன் மாவட்டத்தில் உள்ள பேட்டரி சஸ்மா என்ற பகுதி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சறுக்கியபடி சென்று, சாலை பக்கத்தில் இருந்த 300 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில், காரை ஓட்டிய டிரைவர் பல்வான் சிங், 47, உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் உடல்களை மீட்டனர். அப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டது.

